பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 101 ஆய்வு செய்து கொண் டிருந்தார். வெளியிலிருந்து ஏதோ ஒரு கிருமி வந்து புகுந்திருக்கும் போலும். அது நீலமும் பச்சையும் கலந்தது போன்ற நிறமுடையதா யிருந்தது. அதைக் காளான் என்றும் பூஞ்சணம் என்றும் கூறுவர். அந்தப் பூஞ்சணம் இருந்த தட்டின் அருகி லிருந்த தட்டுக்களில் இருந்த நுண்ணுயிர்கள் அழியத் தொடங்கின. இதைக் கூர்ந்து கண்ட பிளெமிங், கிருமி களைக் கொல்லும் ஆற்றல் பூஞ்சணத்துக்கு உண்டென அறிந்தார். இதைக் கொண்டு கெட்ட நோய்க் கிருமி களை அழிக்கலாம் எனக் கண்டறிந்தார். இதற்குப் பெனிசிலின் (Penicillin) என்று பெயரிட்டார். இதைச் செலுத்தினால் மற்ற கிருமிகள் அழியினும் மனித உயிருக்குக் கெடுதல் இல்லை; இது எந்தப் பின் விளைவையும் ஏற்படுத்தாது; தானும் நச்சுத் தன்மை உடைய தன்று - என்பவற்றை யெல்லாம் இவர் நேரடி ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்தார். மற்றும் சிலரின் உதவி கொண்டு பெனிசிலின் மருந்தை கிரம்பத் தயாரித்தார் இவர். அலெக்சாந்தர் ஃபிளெமிங் திடுதிப்பென்று இதைக் கண்டுபிடித்துப் புழக்கத்துக் கொண்டுவரவில்லை. முயல், எலி போன்ற உயிரிகட்கு இதைச் செலுத்தி ஆய்வு செய்த பின்னரே இதை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தார். அறிவியல் ஆய்வுக்கு இத்தகைய முறை மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்தே இவர் இவ்வாறு செய்தார்.