பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விளையும் பயிர் முளையிலே தெரியும் அறிவியல் அறிஞர்களான எச். டபிள்யூ. ஹவீய் என்பவரும், டாக்டர் ஈ. பி. செய்ன் (Chain) என்பவரும் :ளெமிங்கிற்கு ஆய்வில் பெருந்துணை புரிந்தனர். அதனால் இந்த இருவர்க்கும் .ளெமிங்குக்குமாகச் சேர்த்து 1945 ஆம், ஆண்டு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டது. நோய்க் கிருமியாகிய பாக்ட்டீரியா (Biotics) பெனிசிலினால் ஒழிக்கப்படுகிறது. அதனால் பெனிசிலின் போன்ற மருந்துகள் ஆண்டி பயாட்டிக் (Anti Biotics) எனப்படுகிறது. இந்த மருந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிக்க பயன் அளித்தது. 1844ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் இவருக்கு மிக உயர்ந்த ‘சர்’ என்னும் பட்டம் வழங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது இந்த மருந்து மிகுதியாகத் தயாரிக்கப்பட்டது; பெரிய அளவில் தயாரிக்கும்படி அமெரிக்கா வேண்டப்பட்டது . இதனால், போரில் காயம்பட்ட பலருக்கு உயிர்ப் பிச்சை அளிக்க முடிந்தது. மனித மடையர்கள் போரில் ஒரு பக்கம் ஆயிரக் கணக்கானவர்களைக் கொல்வதும், மற்றொரு பக்கம் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பதும் ஆகிய விந்தையான செயலைக் காணும் ஆடு மாடுகட்கு வாய் இருந்தால் மனிதர்களை நோக்கி, ஒ மனித மடையர்களே ! இது என்ன கேலிக் கூத்து ! ஒரு பக்கம் கொல்வது-ஒரு பக்கம் காப்பது - இது என்ன பண்பாடு என்று கத்தும்.