பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 13 விடக் குறைந்த எடையுள்ள உலோகங்கள் கலந்திருப்பதாக முடிவெடுத்துக் கூறினார். மகுடத்தைப் பிளந்து சிதைக்காமல் கண்டுபிடிக்க வேண்டும் என மன்னன் பணித்திருந்ததால் ஆர்க்கிமிடீஸ் இவ்வாறு ஆய்வு செய்தார் - வெற்றியும் பெற்றார். இவர் கண்டுபிடித்த இந்த முறைக்கு ஆர்க்கிமிடீஸ் விதி' என்பது பெயராம். மன்னனின் பாராட்டும் உலகின் போற்றலும் இவருக்குக் கிடைத்தன. ஆ அந்தோ! தங்கத்தோடு மட்டமான உலோகத் தைக் கலந்து மகுடம் செய்த பொற்கொல்லனுக்கு இறப்பு ஒறுப்பு கிடைத்தது. எப்போதும் நேர் வழியே சீர் வழியாகும் என்பது இதனால் அறியவரும். மிதப்பு விதி ஓரளவு கனமுடைய ஒரு பொருள் தண்ணீரில் மிதக்கும் போது, அப்பொருளின் ஓரளவு அடிப்பாகம் தண்ணீருக்குள் ஆழ்ந்திருக்கும். அந்த ஆழ்ந்த பகுதி எவ்வளவு கன அளவு நீரை அப்புறப்படுத்துகிறதோஅந்த அளவு நீரின் எடையும் அந்தப் பொருளின் எடையும் ஒரு நிகர் என்பது ஆர்க்கிமிடீசின் மற்றொரு கண்டுபிடிப்பாகும். இதற்கு மிதப்பு விதி என்று பெயராம். இந்த மிதப்பு விதியின் துணை கொண்டு பல கப்பல்கள் எளிதில் கட்டப்படுகின்றன. இந்தக் காலத்து அணு ஆற்றல் கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் படைக்கப்படுவதற்கும் இந்த மிதப்பு விதி பேருதவி புரிகிறது.