பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சுந்தர சண்முகனார் Աpւք 6վ பல ஆண்டுகட்கு அப்பால் கி.மு. 212 ஆம் ஆண்டு உரோமர்கள் படையெடுத்து ஆர்க்கிமிடீசின் நகரான சைரக்யூசைக் கைப்பற்றினர். உரோமானியப் படைத் தலைவன் மார்செல்லஸ் என்பவன், சைரக்யூசில் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடீஸ் என்பவர் உள்ளார் என்பதை அறிவான். எனவே, அவன், ஆர்க்கிமிடீசின் உயிருக்கு எந்தத் தீங்கும் செய்து போக்கடிக்கக்கூடாது என்று தன் படை மறவருக்குக் கட்டளையிட்டிருந்தான். இருப்பினும், இதை அறியாத முரட்டுப்படைஞன் ஒருவன் ஆர்க்கிமிடீசின் வீட்டிற்குள்ளும் நுழைந்தான். அப்போது இவர் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்தார். திருட்டுக் குற்றம் பொய்யாகச் சாற்றப் பட்டிருந்த கோவலனை, உடனிருந்த பலர் பேசிக் கொண்டிருந்தபோதே கல்லாக் களிமகன் ஒருவன் வெட்டி வீழ்த்தினாற்போல், அந்த முரட்டுப் படைஞன் ஆர்க்கிமிடீசைத் தன் வாளுக்கு இரையாக்கி விட்டான். தெரு நாய்க்குக் குப்பைத் தொட்டியும் ஒன்றுதான்உயர்தர ஊர்தியும் ஒன்றுதான் - சிறு நீர் விட! இதை யறிந்த உரோமப் படைஞர்கள் சிலர் சொல்லொணாத் துயருழந்து, அரசச் சிறப்புகளுடன் ஆர்க்கிமிடீசின் உடலை அடக்கம் செய்தனர். இறுதியிலாவது சிறப்பளித்தார்களே! என்ன செய்யினும் சென்ற உயிர் திரும்புமா? கறந்த பால் காம்புக்கு ஏறுமா?