பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விளையும்பயிர் முளையில்ே தெரியும் உலகில் தோல்வியுற்ற நாட்டு மக்களின் இரங்கத் தக்க நிலையும், அவ்வாறு செய்த படைஞர்களின் கொடுமைகளும் ஆர்க்கிமிடீசின் முடிவால் புலனாகும். கண்டபடிக் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்யாத அளவில் மனித மந்தை திருந்துவது எப்போதோ? 3. சிறைப்பட்ட அறிவியல் செம்மல் பூமி சுற்றல் தாம் கண்டுபிடித்த ஓர் உண்மையின் கிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டார் ஓர் அறிவியல் செம்மல். அவர் பெயர் கலிலியோ (Galileo) என்பது. கலிலியோ இத்தாலி நாட்டில் பைசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிறந்தார். குடும்பம் ஏழைக் குடும்பம். தந்தை கம்பளி வாணிகம் செய்து வந்தார். ஆயினும், கலிலியோ அரும்பாடு பட்டு அறிவியல், துறைக் கல்வி பெற்றுப் பல அரிய உண்மைகளைக் கண்டு பிடித்து வந்தார். கணித - வானவியல் ஆய்வில் விருப்பம் மிகுதி. கோபர்னிகஸ் (copernicus) என்பவர், பூமிதான் ஞாயிறைச் சுற்றுகிறது என்னும் கருத்தை வெளியிட்டார். இது குறித்து முற்றும் கலிலியோ ஆராய்ந்து, ஞாயிறைப் பூமி முதலிய பல கோள்களும் சுற்றி வருகின்றன என்று