பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. விளையும்பயிர் முளையிலே தெரியும் டிருந்ததைக் கண்டார். நாமும் எத்தனையோ விளக்குகள் ஊசலாடுவதைப் பார்த்திருக்கிறோம். நமக்கு ஏதாவது புதிய எண்ணம் தோன்றியிருக்கிறதா? ஆனால் கலிலியோ இது குறித்து ஆய்வு நடத்தினார். விளக்கு அங்கும் இங்குமாக ஊசலாடும்போது குறிப்பிட்ட ஒரு தொலைவு அளவுக்கே போய் வந்து கொண்டிருந்தது. அது மெதுவாய்ப் போய்வர எவ்வளவு நேரம் பிடித்ததோஅதே அளவு நேரமே விரைவாய்ப் போய் வருவதற்கும் பிடித்தது என்பதைக் கண்டார். f அப்போது கடிகாரம் இல்லையே-இந்த நேர அளவை எவ்வாறு கண்டார். தம் கையில் அடிக்கும் நாடித் துடிப்பைக் கொண்டு கணக்கிட்டார். வலக்கையில் உள்ள நாடித் துடிப்பை இடக்கை விரல்களால் அழுத்திப் பிடித்துப் பார்த்தால் நாடித் துடிப்பு தெரியும். மெதுவாய்ச் சென்றுவர எத்தனைத் துடிப்புகள் தேவைப்பட்டனவோஅத்தனைத்துடிப்புகளே விரைவாகச் சென்று வரும்போதும் செலவாயின. காற்றினால் விரைவாய்ப் போய் வரும் போது, அந்த விரைவை வென்று அடக்கித் திரும்புவதற்கு இருமுனைகளிலுமே சிறிது நோம் கூடுதலாகப் பிடிக்கும் போலும். அதனால் மெதுவாய்ப் போய் வரும் நேரமும் விரைவாய்ப் போய்வரும் நேரமும் சமமாய் இருக்கிறது ப்ோலும். இந்த ஊசல் தத்துவத்தின் அடிப்படையில் கடிகாரம் கண்டு பிடிக்கும் முயற்சி நடந்தது. இந்தக் காலக் கடிகாரத்திற்கு அந்தக் காலத்திலேயே அடிப்படை போடப்பட்டது.