பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் (19 இவர் தொடர்ந்து செய்த ஓர் ஆராய்ச்சியின் முடிபு. அரிஸ்ட்டாட்டிலின் இயக்க விதி தவறு என்று கண்டது. இவ்வாறு பல ஆராய்ச்சி செய்ததின் பயனாக, பைசா நகரத்துப் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி கிடைத்தது. இதுதான் பின்னால் பறிக்கப்பட்டது. அரிஸ்ட்டாட்டிலுக்கு மறுப்பு குறிப்பிட்ட் உயரமான ஓரிடத்திலிருந்து கனமான ஒரு பொருளையும் சிறிது இலேசான ஒரு பொருளையும் ஒரே நேரத்தில் கீழே போட்டால், கனமான பொருளே முதலில் மண்ணில் விழும் என்பது அரிஸ்ட்டாட்டிலின் கொள்கை. நம்முள் பலரும் இவ்வாறே எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால், இருவேறு பொருள்களும் ஒரே நேரத்தில் மண்ணில் விழும் என்று கலிலியோ ஆய்ந்து கூறினார். காற்று விரைவாக அடிக்கும்போது இதில் மாறுதல் இருக்கலாம்-ஆனால், காற்று இல்லாதபோது ஒரே நேரத்தில் மண்ணில் விழும் என்பது இவரது கோட்பாடு. . இதை மெய்ப்பிப்பதற்காக, பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரத்தின் மேல் ஏறி இருவேறு பொருள்களை ஒரே நேரத்தில் கீழே போட்டு அவை ஒரே நேரத்தில் மண்ணில் விழுவதைக் காட்டினார். - தொலை நோக்கி கலிலியோ மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இரண்டு "லென்சுகள் கொண்ட தொலை நோக்கிக் கருவி