பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 21 திங்களின் மேல் வீசும் போது எதிரொளிக்கும் ஒளியே அது. எனவே, திங்களின் பள்ளமான பகுதிகளில் ஞாயிற்றின் ஒளி சரியாகப் படாததால் அந்தப் பகுதி இருட்டாய்-கறுப்பாய்த் தெரிகிறது. ஆனால் விண்ணில் உள்ள விண்மீன்களுக்கு (நட்சத்திரங்கட்கு) ஞாயிறு போலவே சொந்த ஒளி உண்டு எனவும் அறிவித்தார். விண்ணிலே ஆயிரக் கணக்கான விண்மீன்களும், வியாழன் என்னும் கோளுக்கு கிரம்பத் துணைக் கோள் களும் உண்டெனத் தமது தொலை நோக்கியால் கண்டறிந்தார். மற்றும் ஞாயிறில் கரும் புள்ளிகள் உண்டு எனவும் கண்டறிந்து கூறினார். இந்தக் கரும்புள்ளிகளின் (Sun . Spots) வரலாறு மிகவும் வியப்பானது. இந்தப் புள்ளிகள் குழிகளாக-பள்ளங்களாகக் கருதப்படுகின்றன. ஞாயிற்றுப் புள்ளிகள் இந்துமத நூல்களிலும் இந்தக் குழிப் புள்ளிகள் குறிப்பிடப் பட்டுள்ளன. வீடுபேறு (மோட்சம்) அடை பவர்கள் ஞாயிற்றில் உள்ள இந்தக் குழி வழியாகச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. திருமங்கை யாழ்வார் தமது பெரிய திருமடல்’ என்னும் நூலில், “மன்னும் கடுங்கதிரோன்மண்டலத்தில் நல்நடுவுள் அன்னதோர் இல்லின் ஊடுபோய் வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லு மின்கள்” (16-18)