பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விளையும்பயிர் முளையிலே தெரியும் என்று கூறியுள்ளார். கதிரோன் மண்டலம் = ஞாயிறு. நடுவுள். இல்லி = நடுவில் உள்ள தொளை. இந்தத் தொளை வழியாகச் சென்று வீடுபேறு அடைகிறார்கள் என்பதை நம்பாவிடினும், ஞாயிற்றினிடம் கரும்புள்ளி - தொளை உண்டு என்பதையாவது நம்மவர்கள் அறிந் துள்ளார்கள் என்பது தெளிவு. ஞாற்றின் மேற்பரப்பை விட, இந்த ஞாயிற்றின் கரும்புள்ளிக் குழிகள் குளிர்ந்திருக்குமாம். மேல் பரப்பின் வெப்ப நிலை 6000 (ஆறாயிரம்) டிகிரி சென்டிகிரேடு ஆகும். கரும்புள்ளிக் குழிகளின் வெப்பநிலையோ 4000 (நாலாயிரம்) டிகிரி சென்டிகிரேடு தானாம்; இந்தக் கரும் புள்ளிகளைக் கலிலியோ தமது தொலை நோக்கியால் தெளிவாகக் கண்டறிந்துள்ளார். கணிதப் பேராசிரியராகவும் அறிவியல் ஆய்வு அறிஞராகவும் விளங்கிய கலிலியோ தமது ஆய்வு தொடர் பான இரண்டு அரிய பெரிய நூல்களை இயற்றித் தமது அழியாத உடம்பாக விட்டுச் சென்றுள்ளார். இறுதி நிலை பூமி சுற்றவில்லை என்று எழுதித் தந்து இறப்பு ஒறுப்பிலிருந்து உயிர் பிழைத்த கலிலியோ, பதினாறு ஆண்டுகட்குப் பின் மீண்டும் தமது கருத்தை வலியுறுத்தத் தொடங்கினார். இதைப் பொறுக்க முடியாத பழமை வாதிகள் இவரைச் சிறைக்குள் தள்ளிக் கொடுமைப் படுத்தினார்கள். சில்லாண்டுகள் கழித்து இவரை வீட்டுச் சிறைக்குள் வைத்தனர். எங்கும் வெளிவர இயலாது.