பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 23 1637 ஆம் ஆண்டு கண் பார்வை இழந்தும் ஆய்வுப் பணி செய்த அறிஞர் கலிலியோ, எல்லாவற்றையும் விட்டுத் தம் வீட்டுச் சிறையிலேயே 1642 ஆம் ஆண்டு நிறைவேறினார். இசைத்துறையிலும் ஈடுபாடு கொண்டதன்றி, அறிவியல் துறையிலும் அரிய பெரிய ஆக்கப் பணிகள் புரிந்த கலிலியோவுக்கு வாழ்க்கையில் நேர்ந்த இன்னல் களை அறிந்த எந்த உள்ளமும் உடைந்து உருகும். அவர் புகழ் நீடு நிலை பெறுக! அறிமுகம் சில தீமைகளால் தற்செயலாகச் சில நன்மைகள் ஏற்படுவதும் உண்டு. பிளேக் என்பது மிகவும் கொடிய நோய். பல இடங்களிலும் பரவி உயிரைக் கொள்ளை கொள்ளும் நோய். ஒருவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஊரில் பிளேக்