பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விளையும்பயிர் முளையிலே தெரியும் நோய் பரவியத்ாம். அதனால் பதினெட்டுத்திங்கள் காலம் (ஒன்றரை ஆண்டு) பல்கலைக் கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டதாம். அப்போது அந்த மாணாக்கர் லிங்கன்சைர் (Lincolnshire) என்னும் இடத்திலுள்ள தம் பண்ணை வீட்டிற்கு வந்து தங்கினாராம். இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் வாளா (சும்மா) இருக்க மாட்டா என்னும் பழமொழிக்கு ஏற்ப, ஆராய்ச்சி உள்ளம் கொண்ட அந்த மாணாக்கர் அந்த விடுமுறைக் காலத்தில் பல வகை ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல புதிய கண்டுபிடிப்புக்ளைச் செய்தாராம். சர். ஐசக் கியூட்டன் என்பவர் அவரே. இவர் பின்னாளில் அந்தப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் அதன் தலைவ ராகவும் பதவி உதவி பெற்றாராம். இவர் 1642ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் என்று உலகம் கொண்டாடும் டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தார். இவரது பிறப்பு இரங்கத்தக்கது. தோன்றும்போதே தந்தை இல்லை. தாய் வயிற்றில் உரிய காலம் முடிவதற்குள் குறைப் பிள்ளைப் பேறாகப் பிறந்த இவர் மிகவும் மெலிந்து சிறுத்துக் காணப்பட்டாராம். - இவருடைய கண்டுபிடிப்புகள் மிக்க பயனுள்ளவை. இன்றைக்குச் செயற்கைக்கோள் விண்ணில் உலா வருகிற தென்றால் அதற்கு அடி போட்டவர் இவரே எனலாம். ஒளி இயல் ஞாயிற்றின் (சூரியனின்) ஒளியில், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம், கரு நீலம், ஊதா என்னும் ஏழு