பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 25 வண்ணங்கள் இதே வரிசையில் அமைந்திருப்பதை ஆய்ந்து கண்டுபிடித்து உலகுக்கு அளித்தவர் கியூட்டனாவார். ஞாயிற்றின் ஒளி மேலோட்டமாக நோக்குங்கால் வெண் மையாகத் தோன்றினும், அதில் இந்த ஏழு வண்ணங் களும் இதே வரிசையில் உள்ளன. கியூட்டனின் ஒளி இயல் ஆராய்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் இவரது கொள்கையை மறுத்தவர்களும் உண்டு. இந்த நிலை எங்கும் எப்போதும் உள்ளதே. - கியூட்டன் தமக்கு வேண்டிய நுண்பெருக்கு ஆடி’ (டெலஸ்கோப்) என்னும் கருவியைக் கண்டுபிடித்துத் தாமே அதை உருவாக்கிக் கொண்டார். இயக்க இயல் கியூட்டன் பொருள்களின் இயக்கத்தை ஆராய்ந்து 'இயக்க விதி என்னும் ஒரு கொள்கையைக் கண்டு பிடித்தார். இது பற்றி மூன்று பெரிய நூல்களும் எழுதினார். கியூட்டனின் இந்த விதிக்கு கியூட்டனின் இயக்க 655 (Newton's Law of Motion) Stéfugi பெயராகும். - - மண்ணுலகிலிருந்து நாம் விழுந்து விடாததற்கும், கோள்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாததற்கும் விடை கூறும் விளக்கத்தை இந்த இயக்க விதி அறிவிக் கிறது.