பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விளையும் பயிர் முளையிலே தெரியும் ஈர்ப்பு இயல் ஒளி இயல், இயக்க இயல் ஆகியவற்றை அறிவித்த நியூட்டன் ஈர்ப்பு இயலையும் தெளிவு படுத்தினார். ஒரு நாள் ஒர் ஆப்பிள் மரத்தின் கீழே இவர் தங்கியிருந்த பொழுது, ஒர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே தரையில் வந்து விழுந்தது. இதைக் கண்ட நியூட்டன் பழத்தை எடுத்து உண்ணவோ - அல்லது - பையில் வைத்துக் கொள்ளவோ இல்லை. பழம் மேலே போகாமலும் அல்லது நடுவிலேயே நிற்காமலும் கீழே வந்து விழுந்ததற்கு உரிய காரணம் யாதென ஆழ்ந்த எண்ணத்தில் ஈடுபட்டார். பூமிக்கு ஈர்க்கும் விசை உள்ளது.அதனால் தான் ஆப்பிள் கீழே விழுந்தது என்னும் உண்மையும் கண்டறிந்து கூறினார். இதற்குப் புவி ஈர்ப்பு (Gravity) என்று பெயர். தாய்க்கும் குட்டிக்கும் தனித்தனி இவ்வளவு பெரிய ஆராய்ச்சி அறிஞருக்கு ஒரு சிறிய செய்தி தெரியாமல் போனதாகக் கூறுவதுண்டு. அதாவது, இவர் கதவு சாத்தப்பட்டிருக்கும்போது, வீட்டுப் பூனையும் பூனைக் குட்டியும் உள்ளே நுழைவதற்காகப் பெரிய துளை ஒன்றும் அதனினும் சிறிய துளை ஒன்றும் கதவிலே அமைத்திருந்தாராம். யாரோ இவரை நோக்கி இரண்டு துளைகள் எதற்கு என்று வினவினாராம். பெரிய துளை பூனை புகுவதற்கு - சிறிய துளை குட்டி நுழைவதற்கு - என்று நியூட்டன் பதில் இறுத்தாராம். பெரிய துளைவழியாகக் குட்டி நுழைய முடியாதா - பெரிய துளை மட்டும் போதாதா - என்று வந்தவர் கேலியாகக் கேட்டாராம்.