பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 29 இவர் பதினான்காம் ஆண்டில் பள்ளியை விட்டு விட்டோடு அன்னையின் உதவியாளராக இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வீட்டிலும் படித்துக் கொண்டே இருந்தார். அதனால், ஆர்வத்திற்கு அணை போடாமல் மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பயின்று தனித் திறமையுடன் விளங்கி 1665ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற இரண்டாண்டு காலத்திலேயே ஆய்வுக் கண்டுபிடிப்பு களைத் தொடங்கிவிட்டார். முளையிலேயே விளையத் தொடங்கிய இந்த மாபெரும் புகழ் படைத்த ஆய்வு மேதை 1727ஆம் ஆண்டு தமது 85ஆம் அகவையில் இயற்கை எய்தினார். மிகுதியாக மூளை வேலை செய்பவர்கள் விரைவில் சோர்ந்து விழுந்து விடுவர் எனச் சிலர் கூறுவது கியூட்டனைப் பொறுத்த வரையில் பொய்யாயிற்று. பிளேக் நோய் அகலும்வரை விடப்பட்ட பதினெட்டுத் திங்கள் கால விடுமுறையில் கியூட்டன் இவ்வளவு அரிய பெரிய அடைவுகளை நிகழ்த்தியிருக்கிறார். பிளேக் தொடர்பாக - தற்செயலாக ஏற்பட்ட பேறுகள் இவை எனினும், இனி மக்கள் குலத்தில் எந்த நோயும் வராமல் இருக்கும்படி வேண்டுவோமாக.