பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 3! சித்து விளையாடும் சித்தர்களைப்போல் இவ்வளவும் செய்யும் மின்சாரத்தைக் கண்டுபிடித்த மேதையின் பெயர் மைக்கேல் பாரடே (Michael Faraday) என்பது. பிறப்பு வளர்ப்பு பாரடே 1791 செப்டம்பர் 22ஆம் நாள் இலண்ட னின் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவருடைய தந்தை இரும்பு வேலை (கருமார வேலை) செய்யும் ஒர் ஏழை. பாரடே குடும்ப ஏழ்மை காரணமாகப் பெரிய அளவில் உயர்கல்வி பெற முடியவில்லை. தொடக்கக் கல்வியோடு பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டார். இவர் பதின்மூன்றாம் வயதில் புத்தகம் கட்டுவேலை (பைண்டு) செய்யும் கடையொன்றில் வேலைக்கு அமர்ந்தார். விளைய இருக்கும் பயிர் முளையிலேயே நன்கு துளிர்விடத் தொடங்கிவிட்டது. கட்டு செய்வதற்கு வரும் நூல்களைப் பாரடே ஒரு புரட்டு புரட்டிப் பார்ப்பார்; பின்னர்ச் சில நூல்களைப் படிக்கவும் செய்தார். பலதுறை நூல்கள் வருவதால் பலதுறை அறிவு அவர் உள்ளத்தில் அரும்பியது. கடைக்கு வந்த நூல்களுள் அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தவை இரண்டு பெரிய நூல்களாகும். அவற்றுள் ஒன்று என்சைக்கிலோபீடியா பிரிட்டானிகா (Encyclo paedia Brittanica) எ ன் ப து. மற்றொன்று மார்செட்டு என்பவர் எழுதிய வேதியியல் பேச்சுத் தொகுப்பு என்பதாகும்.