பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விளையும் பயிர் முளையிலே தெரியும் என்சைக்கிலோபீடியா என்பது தமிழில் கலைக் களஞ்சியம், எனப்படும். இதில் பற்பல துறைகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் இருக்கும். இதைப் படித்ததால் அவர் பலதுறை அறிவு பெற முடிந்தது. வேதியியல் பேச்சுத் தொகுப்பு நூல் படித்ததால் அறிவியல் ஆர்வம் பிறந்தது. இந்தக் கால கட்டத்தில், சர் அம்பரி டேவி (Sir Humphry Davy) 6T6IL6li 2006öIL-6r ராயல் கழகத்தில் தொடர்ந்து அறிவியல் சொற்பொழிவு செய்து வந்தார். இந்தக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டுமாயின் நுழைவுச் சீட்டு பெற்றுச் செல்லவேண்டும். கேள்வி பாரடே, நூல் கடைக்கு வரும் பெரியவர் ஒருவர் மூலம் நுழைவுச் சீட்டு பெற்றுத் தொடர்ந்து சென்று டேவியின் சொற்பொழிவுகளைக் கேட்டு வந்தார். கேள்வியும் கல்வியாகும் என்று திவாகரநிகண்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. கேள்விச் செல்வம் பற்றித் திருவள்ளுவர் பத்துக் குறள்பாக்கள் எழுதியுள்ளார். அந்தக் கேள்விக் கல்வியைப் பாரடே பெற்றார். கேட்டவற்றை யெல்லாம் பலர் செய்வதுபோல் காற்றில் விட்டுவிட வில்லை. கேட்டவை அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டார். இது நிகழ்ந்தது இவரது 19 ஆம் அகவையில் (1810) ஆகும். இருபத்தோர் அகவையானதும் புத்தகக் கடையை விட்டு வேறிடத்தில் வேலை பார்த்தார். ஆனால்