பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விளையும் பயிர் முளையிலே தெரியும் பிள்ளையைப் பற்றிச் சொல்லவா வேண்டும் கத்தி பட்ட கண் பழுதுற்றது. தந்தை எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தார். கண் கூடிவரவில்லை. பார்வை போயிற்று. அடுத்த ஆறு மாதத்தில் எப்படியோ மற்றொரு கண்னும் பார்வை இழந்தது. இது இயற்கையின் விதி போலும்! இருகண்களும் கெட்ட முழுக் குருடராகி விட்டார் லூயிஸ். இவருடைய தந்தை பத்தாவது வயதில் இவரைப் பாரிஸில் உள்ள ஒரு குருடர் பள்ளியில் சேர்த்து விட்டார். இந்த விளையும் பயிர் முளையிலேயே கல்வியில் சிறந்தார்; மேலும் வளர்ச்சி பெற்றுக் கணிதத்துறையில் வல்லமை பெற்றார். நல்ல இசைப் பயிற்சியும் இவருக்கு உண்டு. பாம்பறியும் பாம்பின்கால் என்றபடி குருடர்களின் வருத்தம் குருடருக்குத் தானே தெரியும். குருடர்கள் படிப்பதற்கு ஒருவகை எழுத்து முறை கண்டுபிடித்தார். அதாவது, தாளின் மேல் தடவினால் தெரியும்படியான மொக்கு மொக்காகப் புள்ளிகளை அமைத்தார். ஒவ்வொரு குறியீட்டிற்கும் பொருள் தந்தார். கையால் தடவிக் கொண்டே போனால் எழுதப்பட்ட வரிவடிவத்தின் கருத்து புரியும். தட்டச்சு அடிப்பவரின் கை விரல்கள் எழுத்துப் பொத்தானைப் பார்க்காமலேயே பொருத்தமாகத் தட்டு கிறது. இது பயிற்சியின் முதிர்ச்சி. இதுபோலவே, லூயிஸ் அமைத்துள்ள வரிவடிவங்களைக் கைவிரலால் தடவியே கருத்தை அறிந்து கொள்ளலாம். இந்த முறையில் படிப்பவர்கள் கண்ணால் பார்த்துப் படிக்காமல் கையால் தடவிப் படிக்கிறார்கள்.