பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 39 விளையும் பயிராகிய லூயிஸ் முளையிலேயே அதாவது 16ஆம் அகவையிலேயே இந்த முறையை உருவாக்கினார். தொடக்கத்தில் அரசாங்கம் இந்த முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், மாணாக்கர்கள் இந்த முறையில் எல்லா எழுத்து வடிவங்களையும் புரிந்து கொண்டு தாமும் அவ்வாறே எழுதவும் படிக்கவும் முற்பட்டனர். லூயிஸ் தான் கற்ற குருடர் பள்ளியிலேயே ஆசிரிய ராகப் பணியாற்றினார்; நோயால் வருந்தினார்; தனது துயரைப் பொருட்படுத்தாமல் தம் கடமையைத் தொடர்ந்து செய்து வந்தார். இறுயில், பார்வையற்றோர் நிறுவனம் லூயிஸின் முறையை அப்படியே ஏற்றுக் கொண்டது. நாளடைவில் லூயிஸ் முறை இங்கிலாந்திலும் பாராட்டப்பட்டது. அந்தக் காலத்தில் லண்டனில் பார்வை தெரியாத மருத்துவர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் தாமஸ் ரோட்ஸ் ஆமிடேஜ் (Thomas Rhodes Armitage) என்பது. இவர் லூயிஸ் பிரேலி முறையில், குருடர்கள் படிப்பதற்கு ஏற்ற பல நூல்களை உருவாக்கி வெளியிட்டார். இவரது நிறுவனம், நூற்றுக்கணக்கில் நூல்களும் இதழ்களும் (பத்திரிகைகளும்) வெளியிடு கின்றன. இந்த நிறுவனத்தின் நூலகத்தில் இந்த முறையில் உருவாக்கப்பட்ட நூறாயிரக் கணக்கான நூல்கள் உள்ளன.