பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 41 இவருடைய தந்தை மருத்துவர்; பாட்டன் அறிவியல் ஆசிரியர். இந்த மரபு வழியில் பிறந்தும் இவருக்கு இளமையில் படிப்பு ஏறவில்லை. டார்வின் அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருந்ததும் உண்டு. தொடக்கத்தில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார் - அது பிடிக்கவில்லை. பிறகு மத குருவாக ஆகலாம் என அதற்கு ஏற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து மதகுருவாவதற்கு உரிய பட்டம் பெற்றார். ஆனால் இவர் மதகுருவாக ஆகவில்லை. பிற்காலத்தில் மதகுருமார்களுக்கும் முரண் பாடான ஆராய்ச்சியில் ஈடுபட்டவராயிற்றே இவர். "பீகிள் (H.M. S. Beagle) என்னும் அரசுக் கப்பலின் தலைவர் (கேப்டன்) ஸ்பிட்ஸ்ராய் என்பவர் தென் அமெரிக்காவின் கரையில் ஆராய்ச்சி செய்யப் புறப் பட்டார். டார்வினின் நண்பராகிய ஹென்ஸ்லோ (Henslow) என்பவர் டார்வினும் அந்தக் கப்பலில் சென்று ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தார். பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டார்வின் அந்தக் கப்பலின் இயற்கை அறிவியலாராக (Naturalist) அமர்த்தப் பெற்றார். c லெவன் போர்டு என்னும் துறைமுகத்தில் புறப் பட்டவர்கள் ஐந்தாண்டு காலம் பல தீவுகட்கும் சென்று ஆராய்ச்சி செய்தனர். டார்வின் பலவிதமான உயிரிகளைப் பிடித்து ஆய்ந்து ஒரு பெட்டிக்குள் வைத்துப் பிறகு இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார். -