பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 43 மனிதனின் மரபு வழி உயிரினங்கள் அனைத்தும் ஒரே காலத்தில் படைக்கப் பட்டவை அல்ல. பண்டைக் காலத்தில் இத்தனை வகை உயிர்கள் இல்லை. எல்லா உயிரினங்களும் தொடக்கத்தில் ஏதோ ஒரே மூலப் பொருளிலிருந்து தோன்றி ஒன்றி லிருந்து ஒன்றாக மாறி வந்தவையே என்று டார்வின் கூறினார். தாமஸ் மால்த்துஸ் என்பவர் மக்கள் தொகை பற்றி எழுதிய நூலைப் படித்ததும் டார்வின் தமது கருத்து சரியே என்று சரிபார்த்துக்கொண்டார். இது (5sjäg, “IDää6flé losu Suff' (The Descent of Man) என்னும் நூலை எழுதினார். மேலும் சில நூல்கள் வெளி வந்தன. எவல்யூஷன் டார்வினின் கொள்கையைப் பலர் - அதிலும் மத வாதிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பெரிய மறுப்பும் எதிர்ப்பும் எழுந்தன. டார்வினின் கொள்கைக்கு எவல் யூஷன் என்று ஆங்கிலத்தில் பெயர் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையைக் கற்பித்த பள்ளி ஆசிரியர் ஒருவர், வழக்கு தொடரப்பட்டு ஒறுக்கப்பட்டாராம். இக்கொள்கை பற்றிச் சிறிது ஆய்வு செய்யலாம். டார்வின் கொள்கை (Darwin Theory) எனப்படும் இவரது கொள்கை பரிணாமக் கொள்கையாகும். எவல்யூஷன் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் பரிணாமம் என்பது. பரிணாமம் என்னும் வடமொழிச் சொல்லின் பொருள், ஒன்று திரிந்து தொடர்புடைய