பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விளையும் பயிர் முளையிலே தெரியும் வேறொன்றாக மாறுதல் என்பதாகும். இதனைச் சுருக்கமாகத் தமிழில் திரிபு மாற்றம் என்னும் பெயரால் குறிப்பிடலாம். இதை ஆங்கிலத்தில் Evolutionism என்று சொல்லுவர். உள்ள ஒன்றே திரிந்து கூர்ந்து வேறொன்றாக மாறி வளர்தலின், இதனைத் தமிழில் உள்ளது கூர்தல்', 'உள்ளது சிறத்தல் என்னும் தொடர்களாலும் வழங்குவர். டார்வின் கொள்கையைச் சிறப்பாக விளக்கப் படைப்புக் கொள்கை (Creationism) என்பது பற்றியும் ஈண்டு முதலில் காணவேண்டும். படைப்புக் கொள்கை கடவுளே எல்லா உலக அண்டங்களையும் உயிர் களையும் படைத்தார். ஓர் உயிர் இனத்திற்கும் மற்றோர் உயிர் இனத்திற்கும் தொடர்பில்லை. கடவுளே ஒவ்வோர் உயிர் இனத்தையும் தனித்தனியாகப் படைத்தார்; தொடக்கக் காலத்தில் படைத்தது மட்டு மல்லாமல், இடையிடையே புதிது புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவில்லை; தொடக்கக் காலத்தில் ஒன்று தோன்றுவதற்கு எது முதல் காரணமாக இருந்ததோ, அந்த முதல் காரணமே பின்னரும் பின்னரும் பல்வேறு வகைகள் தனித்தனியே தோன்று வதற்குக் காரணமாக உள்ளது என்றெல்லாம் படைப்புக் கொள்கையினர் கூறி வருகின்றனர். இவர்கள் வேறு யாரும் அல்லர் - உலகிலுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றுபவருமேயாவர்.