பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விளையும் பயிர் முளையிலே தெரியும் பொருளாம். இது குசராத் குழந்தையைப் போல் சிலருக்கு வெளியிலும் வந்துவிடும் போலும். எனவே, இப்பொழுது உள்ள மாந்தர்க்கும் வால் உண்டு என்பதாகச் சொல்லப் படுகிறது. வால் போகட்டும். கபி என்னும் மனிதக் குரங்கு வகை, வால் இல்லாப் பெருங்குரங்கு வகை (Gorilla), உராங்குடான் வகை ஆகியவை மாந்தரோடு ஒத்துள்ளனவாம். . இந்தோனேசியா நாட்டுக் காடுகளில் வாழும் மனிதக் குரங்குகளின் பெயர் உராங்குடான் என்ப தாகும். அந்நாட்டு மொழியாகிய மலாய் மொழியில், உராங்குடான் என்பதற்குக் காட்டு மனிதன் என்பது பொருளாம். இங்கே முதல் முதலாக வந்த ஐரோப்பியர்கள் இவற்றைக் காட்டு மனிதர்கள்’ என்றே எண்ணினராம். உருவத்தில் மனிதரை ஒத்துள்ள இவை, ஆறடி உயரம் உள்ளவை. மனிதர்கள் போலவே நேராக கிமிர்ந்து நடக்கும் இவற்றிற்கு வால் இல்லை. இந்தச் செய்திகள் எல்லாம், மனிதனின் முன்தோற்றம். முதல் தோற்றம் குரங்கு இதற்கும் மனிதனுக்கும் இடைப்பட்டது மனிதக் குரங்கு - என்பதற்கு உரிய சான்றுகளாகச் சொல்லப்படுகின்றன. இதைக்கொண்டு, குரங்கு மனிதனுக்கு எட்டிய உறவு எனவும், மனிதக் குரங்கு மனிதனுக்கு ஓரளவு கிட்டிய உறவு என்றும் கூறலாம் போலும்.