பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாயில் வாயில் (காயில் வாயில் = நாய் இல் வாயில் நாய் இல்லாத வீட்டு வாயிற்படி) நாய்க் கடி நாய் நன்றியுள்ள விலங்கு என்பர். யாரிடம் நன்றி உள்ள விலங்கு? தனக்கு உணவு அளித்துக் காப்பவரிடம் நன்றி செலுத்தும்; மற்றவர் ஏமாந்தால் கடித்து விடும். சிலர் வீடுகட்குச் செல்லின் வரவேற்பாளர் வந்து "வள்-வள்’ என்று விழுந்து பிடுங்குவார். அவர்தான் 'திருவாளர் நாயார். சில விடுகட்குள் நுழையும் போதே நாய் இருக்கிறதா என்று கேட்டு விட்டு நுழைவார்கள் செல்பவர்கள். இல்லை என்றால், கவலை இன்றிச் செல்வார்கள். - சில வீடுகளில் நாய் இருக்கும்; செல்பவரைக் கண்டதும் குலைத்துக் கொண்டே ஓடி வந்து விரட்டும். செல்பவர்கள், நாயைப் பிடித்துக் கட்டுங்கள் என்று அபயக் குரல் எழுப்புவர். வீட்டுக்காரர் ஒன்றும் செய்யாது வாருங்கள் என்று துணிவூட்டுவார். அதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பார் வந்தவர். பிடித்துக் கொண்டபின்னும் வந்தவரின் கைகளையும் கால்களையும் நாக்கால் தடவும். வீட்டுக்காரர் நாயைத் தூக்கி