பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் - - 51 அணைத்து முத்தம் கொடுத்துக் கொஞ்சுவார். வந்த வருக்கோ குலை நடுங்கும். நாய் எதற்கு என்று கேட்டால் திருடர்களைத் தடுக்க - என்ற பதில் வருகிறது. பண்டைக் காலத் தமிழ் அரசுகள் போலவும், இக்கால அரபு நாட்டு அரசுகள் போலவும் திருடனுக்கு ஒறுப்பு அளிப்பின் திருடர்களை அடியோடு அகற்றி விடலாமே. - இதனால் தெரிவது, நாய் உள்ள வீடு நல்ல தன்று என்பது. ஒரில் பிச்சையார் என்னும் புலவர் குறுங் தொகை என்னும் நூலில், ஒரு வீட்டு வாயிற்படியை, குற்றமற்ற தெருவில் உள்ள நாய் இல்லாத அகன்ற வாயிற்படி என்னும் பொருளில், - 'ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை” என்று குறிப்பிட்டுள்ளார். யார் வேண்டுமானாலும் தடையின்றிச் செல்லும்படி அகன்ற (வியன்) கடை வாயிற் படியாம். இத்தகைய வீடுகள் இருக்கும் தெரு குற்றமற்ற தெருவாம். பெரும்பாண் ஆற்றுப்படை என்னும் நூலில், நாய் இல்லாமை, 'பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது” (298, 299) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞமலி = நாய், துன்னாது = அடையாது. எனவே, நாய் மங்தை மேய்ப்பவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.