பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விளையும் பயிர் முளையிலே தெரியும் சிறிது மாறுதலாக நடந்து கொண்டால் நாய் உடையவரையும் கடித்து விடுவதுண்டு. ‘நாயும் உடையானைக் கவ்வி விடும் என்பது, பழமொழி நானூறு என்னும் நூலில் உள்ள ஓர் அடி. வீட்டில் வளர்க்கும் நாய்கள் வெளியாரைக் கடித்து விடுவ துண்டு, தெருவில் திரியும் வெறி நாய்கள் கடிப்பதற்குக் கேட்கவா வேண்டும்? நாய்க் கடியினால் இறந்தவர் பலர். வெறிநாய் கடித்தவர்கள் சிலர் வெறி நாய் போலவே குலைத்து இறந்து விட்டிருக்கின்றனர். இதற்கு மருத்துவம் சூடு போடுவதுதான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்சு நாட்டில் ஒருவரை வெறிநாய் கடித்து விட்டது, அவருக்கு இரும்பைக் காய்ச்சி சூடு போடப்பட்டது. அவர் நாய்க்கடிக்காயம், சூட்டுக்காயம் ஆகியவற்றால் மிகவும் வேதனைப்பட்டார். இதை ஒரிளைஞர் பார்த்து மிகவும் வருந்தினார். இந்த விளையும் பயிர் முளையிலேயே ஆய்வு வேலையைத் தொடங்கிவிட்டது. அந்த விளையும் பயிர் ஆனவர், லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) என்ற அறிவியல் அறிஞராவார். இவர் அரும்பாடு பட்டு ஆய்வு செய்து நாய்க் கடிக்கு மருந்து கண்டு பிடித்தார். நாய் கடித்த ஒருவருக்கு ஊசி மூலம் அந்த மருந்தைச் செலுத்தி உயிர் பிழைக்கச் செய்தார். பிறகு இது இன்றளவும் பெரிய அளவில் வெற்றி தந்து கொண்டிருக்கிறது. லூயிஸ் பாஸ்டர் என்றாலே நாய்க்கடி மருந்து நினைவுக்கு வரும். வேலைக்கு ஆளெடுக்கும் சில நேர்