பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 55 மாற்றங்கள் பல ஏற்படுகின்றன என்பதைக் கண்டு பிடித்தார். இந்த நுண்ணுயிர்களில் இருவகை உண்டு. சில நன்மை பயக்கும்; சில தீமை உண்டாக்கும். சில பாலைத் தயிராக்கும், பழரசத்தைச் சாராயமாக்கும்; பாலைக் காய்ச்சும்போது புளிக்காமல் இருக்கச் செய்யும். வேறு சில அழுகல், புளித்தல் போன்றவற்றைச் செய்யும். சில, தோல் பதனிடுதல், சில பொருள்களைத் தூய்மை செய்தல் முதலியவற்றிற்கு உதவும். பாஸ்டியர் முறை பால் மற்றும் நாம் உண்ணும் பொருள்கள் கெடாமல் வைத்திருப்பதற்குப் பாஸ்டர் ஆய்ந்து கூறிய முறை அவர் பெயராலேயே பாஸ்டியர் முறை’ (Pasteurization) 6T6ITÚ பெயர் இடப்பட்டுள்ளது. பாஸ்டரின் ஆய்வுகளில், பயிர் கெடுதல், தசை அழுகல், பலவகைக் காய்ச்சல்கள் (ஜுரங்கள்) முதலியவை உண்டாவதற்கு நுண்ணுயிர்களே காரணம் என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் மக்கள் விழிப்படைந்தனர். நோய்களைத் தடுக்கும் முறைகளும் பாஸ்டர் ஆய்ந்து கண்டு பயனடையச் செய்தார். பாஸ்டரின் மகள் ஒருத்தி 1873ஆம் ஆண்டு டைபாயிடு காய்ச்சலால் இறந்து விட்டதால் மனம் புண் அடைந்து நோய்போக்கும் முறை ஆய்வில் முனைப்புற்றது. அந்தக் காலத்தில் தூய்மையற்றிருந்த மருத்துவமனைகள் தூய்மையுறச் செய்தார்.