பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 57 குடும்பம் தாம் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்த பல்கலைக் கழக மேலாளரின் மகளையே திருமணம் செய்து கொண்டார் பாஸ்டர். அந்த அம்மையாரின் பெயர் மரி ரோலேன் என்பது. பல நோய்கட்கு உரிய காரணங்களைக் கண்டு பிடித்து அவற்றிற்கு மாற்று மருத்துவம் கண்டு பிடித்துப் பல உயிர்களைக் காப்பாற்றிய பாஸ்டருக்கும் மரி ரோலேனுக்கும் பிறந்த பிள்ளைகளுள் மூன்று பிள்ளைகள் இறந்து விட்டனராம். இதனால், இவர்களின் துயரத்தை அளவிட முடியுமா? புத்திர சோகம் கிரந்தரம் என்பது ஒரு பட்டறிவு மொழி. முடிவு இறுதியில் கைகால்களை இழுக்கும் இழுப்பு (பாரிச) நோய் பாஸ்டரைப் பீடித்தது. பிறந்தவர் எப்படியும் என்றைக்காவது ஒரு நாள் இறந்துதானே தீரவேண்டும். 1859ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் பாஸ்டர் மண்ணுலக வாழ்வை நீத்தார். பாஸ்டர் மறையினும், மக்களினம் நாய் கடி நோய்க்கு மருந்து உண்டு - பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொள்ளும்படிச் செய்த அருடைய புகழ் மறையாது. “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே” (165:1, 2) - புறங்ானூறு.