பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. விளக்கு ஏற்றிவைத்த வித்தகர் ஒளி மிகுதி அம்பலவாணக் கவிராயர் என்னும் புலவர் அறப்பளிசுர சதகம் என்னும் ஒரு நூல் இயற்றியுள்ளார். அதில், மின்மினியைவிட விளக்குக்கு ஒளி மிகுதி - விளக்கைவிட தீவர்த்திக்கு (தீவட்டிக்கு) ஒளி மிகுதி அதனினும் வாணத்திற்கு ஒளி மிகுதி அதனினும் மத்தாப்புக்கு ஒளி மிகுதி என்று எழுதியுள்ளார். அந்தப் புலவர் இப்போது இருந்தால், எல்லாவற்றைக் காட்டிலும் மின்சார விளக்குக்கு ஒளி மிகுதி என்று எழுதியிருப்பார். பண்டைக் காலத்தில் விளக்கு எரிய ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தினர். அதனால் அந்த எண்ணெய்க்கு விளக்கெண்ணெய் என்னும் பெயர் இன்றும் வழங்கப்படுகின்றது. பண்டைக் காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற் றாண்டின் முன்பாதிவரை, எந்த விளக்கை எரியவைக்க வேண்டுமெனினும் எண்ணெய் ஊற்றவேண்டியிருந்தது. அவர் தண்ணீரால் விளக்கு எரித்தார் - இவர் மந்திரத்தால் விளக்கு எரித்தார் என்னும் செய்திகளை எல்லாரும் நம்பார்.