பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 65 தொடங்கினார். கார்பன் டெலிபோன் டிரான்ஸ்மீட்டர் உருவாக்கினார். ஒலிப் பதிவுக் கருவியைக் கண்டு பிடிக்க ஒய்வு ஒழிவின்றி மூன்று நாள்கள் (72 மணி நேரம்) எடிசனுக்குத் தேவைப்பட்டனவாம். பரந்த மனப்பான்மை ஒருவர் தாம் மட்டும் உயர்ந்தால் போதாது - மற்றவரையும் உயரச்செய்ய வேண்டும் என்னும் கருத்தில், "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்றார் திருமூலர். 'எல்லாரும் இன்புற்றிருக்க கினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்றார் தாயுமானவர். “தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு, காமுறுவர் கற்றறிந்தார்’ என்றார் திருவள்ளுவர். இ ங் த அடிப்படையில், எடிசன் அறிவியலார் சிலரை உடன் வைத்துக்கொண்டு, அவர் கட்கும் அறிவியல் நுட்பங்களை உணர்த்தித் தொழிற் படச் செய்து பல கருவிகளைக் கண்டுபிடித்தார். ஒலித்தட்டுப் பொறி (கிராம போன்) கண்டு பிடித்ததால் இவர் கிராம போனின் தந்தை என அழைக்கப்பட்டார். வானொலி, தொலைக்காட்சி போன்றன வருவதற்கு முன்பு மக்கள் கிராமபோனையே பயன்படுத்தி வந்தனர். நம் நாட்டில் சிற்றுார்களில் ஒருவர் அல்லது இருவர் வீட்டிலே கிராமபோன் இருக்கும். இதைச் செயற் படுத்தியதும், ஊர்மக்கள் ஒன்று கூடிக் கேட்டு இன்புற்றிருப்பர். சுருளிமலை மீதும் மேவும் சீலா .