பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 விளையும் பயிர் முளையிலே தெரியும் உன்னைத் தோத்தரித்தேன் சுப்பிரமணிய வேலா” என்பது போன்ற பாடல்களை மக்கள் கேட்டு மகிழ்ச்சியில் திளைப்பர். இது இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலாகும். இப்போதும் சில இடங்களில் உண்டு, இப்போது நாம் ஒரு பொத்தானை அழுத்தினால் ஒளி மயமான கண்ணாடிக் குமிழ் (Bulb) விளக்கு எரிகிறது. எடிசன் இதைக் கண்டுபிடிக்கப் பல்லாண்டுகள் உழைத்தாராம் - 40,000 டாலர் பணம் செலவிட்டா ராம். எளிதாகப் பொத்தானைத் தட்டிப் பயன் கொள்ளுபவர்கள் எல்லாருக்கும் எடிசனின் உழைப்பு தெரியுமா என்ன? விளக்கெண்ணெய் விளக்கொளியில் படித்தவர்களின் வழிவந்த நாம், இன்று மின்விளக்குப் பேரொளியில் படிக்கிறோம் - எழுதுகிறோம் - என்ன வியப்பு? ஆ புழுங்குகிறதே - உடம்பு பற்றி எரிகிறதே என்று சொல்லிக் கொண்டே ஒரு பொத்தானைத் தட்டுகிறோம் - இனிமையான காற்றை மின் விசிறி சுற்றி அளித்து இன்யூட்டுகிறது. ஒய்வு நேரத்தைக் கழிக்கவும், உடல் சோர்வையும் உள்ளச் சோர்வையும் போக்கவும் திரைப்படத்திற்கு (சினிமாவுக்கு) மக்கள் செல்கின்றனர். அந்தத் திரைப்படப் படம் எடுப்பியைக் (காமிராவைக்) கண்டு பிடித்தவரும் இதே எடிசன்தான். கிராம போன் தந்தை, மின் விளக்கு - விசிறித் தந்தை, திரைப்படத் தந்தை, மின்சாரம் தொடர்பாக