பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் உள்ள பல கருவிகளின் தந்தை ஆகிய இத்தனைத் தந்தையும் எடிசன் ஒருவரே. இவர் புதுவகைச் சேமக்கலம் ஒன்றும் அழைத்தார். இது எடிசன் கலம் (Edision cell) எனப் பெயர் வழங்கப்படுகிறது. இவ்வளவு அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய எடிசன், இளமையில் ஒரு முறை, தாம் பணியாற்றிய இடத்தில் இரவில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மணியடிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டாராம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மணி அடிக்க வேண்டு மெனில் இரவு முழுதும் தூங்க முடியாது. எனவே, மணி அடிக்கும் கருவி அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தானே அடிக்கும்படியாக அந்தக் கருவியில் ஏதோ புதுமை புகுத்தி அடிக்கச் செய்து தாம் தூங்கினாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இதுதான். எடிசன் வரலாற்றைப் படிக்கும் இளைஞர்கள் பின் பற்ற வேண்டியவை: சோம்பல் கூடாது. அயராது உழைக்க வேண்டும். தொழிலில் சிறுமை பெருமை பார்க்கக் கூடாது. ஒன்றிரண்டு பணி செய்தால் போதாது. உலகிற்குப் பயன்படும் பல பணிகள் புரியவேண்டும். தோல்வியைக் கண்டு துவளக் கூடாது.