பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் - 69 என்பது அவர் இயற்றிய பாடல். பவணந்தி முனிவர் என்பவரும் தாம் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் தொல்காப்பியத்தை ஒட்டி - இவ்வாறே "புல்மரம் முதல உற்றறியும் ஓர் அறிவு உயிர்” (உரியியல்-4) எனப் பாடியுள்ளார். ஆனால், தாவரங்கட்கும் எல்லா அறிவும் உண்டு என ஆராய்ந்து கூறியவர் ஒருவர் உண்டென்றால் அவர் மிகவும் வியக்கத் தக்கவர் அல்லவா? பல அறிவுகள் தாவரங்களும் உண்ணுவதும் உயிர்ப்பதும் (சுவாசிப் பதும்), உறங்குவதும், சோர்வு அடைவதும், உற்சாகம் கொள்வதும் உண்டு என அவர் ஆராய்ந்து கூறியுள்ளார். இது என்ன பெரிது? ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து குழந்தை பெறும் மற்ற உயிரினங்களைப் போல் தாவரங் களும் ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து குழந்தை பெறு கின்றன. தாவரங்கள் குழந்தை பெறுவதென்றால், பூத்துக் காய்த்துக் கனி கொடுப்பதுதான். பெண் பூவின் கருப்பையில் ஆண் பூவின் மகரந்தப் பொடி வந்து சேர்ந்தால்தான், பெண்பூ கருவுற்றுக் காய்க்கும். வண்டின் மூலம் ஆண் பூவின் மகரந்தம் பெண் பூவுக்குக் கொண்டுவரப்படுகிறது. இதைப் பெண்யூ எதிர்பார்க்கிறதாம். இதைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மலர்கள் சொல்வது போல,