பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விளையும் பயிர் முளையிலே தெரியும் “ಮೀಕ(TaTa எதிர்பார்த்து நிற்போம் - நல்ல வாசனை வீசி நிற்போம்” என்று பாடியுள்ளார். வாசனை வீசுவதும் வண்டின் கவனத்தைத் தம்பால் ஈர்ப்பதற்காகத்தான். தாவரங்களுக்கும் பல அறிவுகள் உண்டு என்பது இப்போது புரிகிறது அல்லவா? மக்கள் குழந்தைக்கு உணவும் மருந்தும் இன்ன பிற வாய்ப்பு வசதிகளும் கொடுத்து வளர்ப்பதுபோல் தாவரங்களையும் வளர்க் கிறோம் அல்லவா. எனவே, தாவரங்கள் தொட்டறிதலாகிய ஓர் அறிவு மட்டும் உடையவை எனப் பல நூறு ஆண்டுகட்கு முன் கூறியிருப்பதை மறுக்கும் முறையில் தாவரங்கட்கும் பல அறிவுகள் உண்டு என்று ஒருவர் ஆய்ந்து கூறியிருப்பது சரிதானே! இதைக் கூறியிருக்கும் அறிவியல் அறிஞர் பெயர் சர் சகதீச சந்திர போஸ் என்பது. தாவரங்களின் இயல்பைக் கண்டறிவதற்கு உதவும் "கிரஸ்கோகிராஃப் என்னும் கருவியைச் சந்திரபோஸ் கண்டுபிடித்து அன்ைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தக் கருவியைக் கொண்டு, தாவரங்களின் வளர்ச்சியை அறியலாம். ஒரு செடி ஒவ்வொரு விநாடி யிலும் எவ்வளவோ உயரம் வளர்வதாக அந்தக் கருவி காட்டும். ஒரு மருந்து கண்டுபிடித்தால் அதை மற்ற உயிர் களுக்குக் கொடுக்கல மா என்பதைக் கண்டறிய, ஒரு