பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 75 கல்லுக்கும் உயிர் உண்டு என்று கூறும்போது, உலோகத்திற்கு உயிர் உண்டு என சந்திரபோசு கூறியிருப்பதிலும் ஏதோ பொருளுண்டு எனத் தெரிகிறது. ஆராய்ச்சிக் கழகம் போஸ் 1917-ஆம் ஆண்டில் கல்கத்தாவில் ஓர் ஆராய்ச்சிக் கழகம் நிறுவித் தாமே அதன் தலைவராகவும் இருந்து பல ஆய்வுப் பணிகள் செய்தார். அதன் பெயரும் இவர் பெயராலேயே போஸ் ஆராய்ச்சிக் கழகம் என வழங்கப்பட்டது. சிறப்புகள் - இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் அசோசியேஷன்” என்னும் அறிவியல் நிறுவனத்தார், தாங்கள் லிவர்.பூலில் நடத்தும் அறிவியல் கூட்டத்திற்கு வரும்படி போசை அழைத்தனர். அங்கே போஸ் மிகச் சிறந்த பேருரை நிகழ்த்திப் பெரும் புகழ் பெற்றார். மற்றொன்று இலண்டன் ராயல் சொசைட்டி என்னும் கழகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சொற்பொழிவு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டார். தமது சொற்பொழிவைத், துணைக்கருவிகளை வைத்துச் செய்து காட்டியபடியே நிகழ்த்துவது இவரது வழக்கம். இவர் கண்டு பிடித்த பல கருவிகளைத் தாங்களே செய்து கொள்ளும் உரிமைக்கு விலை கொடுப்பதாகப் பிரிட்டிஷார் சிலர் முன்வந்தனர். இலவசமாகவே செய்து