பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விளையும் பயிர் முளையிலே தெரியும் மனிதனும் பறக்கும் பறவையாகி விட்டான். பருந்துப் பறவை, கிளிப் பறவை முதலியனபோல், பறக்கும் மனிதனை மனிதப் பறவை என்று சொல்லலாம் போலும்! மனிதன் பறக்க உதவும் சாதனம், (Aeroplane) என ஆங்கிலத்திலும்,ஆகாய விமானம் எனச் சமசுகிருதத்திலும் வான ஊர்தி எனத் தமிழிலும் பெயர் வழங்கப்பெறுகிறது. இந்தப் பறக்கும் சாதனத்தைக் கண்டு பிடித்த அண்ணன், தம்பி ஆகிய இருவரும் Wright Brothers என ஆங்கிலத்திலும், ரைட் சகோதரர்கள் எனச் சமசுகிருதத்திலும் குறிப்பிடப்படுகின்றனர். தமிழில் இவர்களை ரைட் உடன்பிறப்புகள் எனக் குறிப்பிடலாம். சிற்றுார்களில், உடன் பிறந்தவர்களை என் பிறப்பு என்று கூறும் மரபு உண்டு. இலக்கியங்களிலும் உடன் பிறப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த ரைட் உடன் பிறப்புகள், முளையிலேயே நன்கு விளையும் பயிர்களாகத் திகழ்ந்தனர். அவர்களின் வரலாறு வருமாறு : பிறப்பு வளர்ப்பு பிறந்த நாடு அமெரிக்கா. தங்தை மீல்ட்டன் ரைட் என்பவர். தாய் சூசைன் காதரின் என்பவர். உடன் பிறப்புகளின் பெயர்கள் ரைட் ஆர்வில் (Wright orie), ரைட் வில்பர் (Wright Wilbur) என்பன. வில்பர் 1867ஆம் ஆண்டு மில்வில் (Milville) என்னும் நகரில் பிறந்தார். ஆர்வில் 1871 ஆம் ஆண்டு ஒகியோவைச் (olio) சேர்ந்த டேட்டன் (Dayton) என்னும் இடத்தில் பிறந்தார்.