பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விளையும் பயிர் முளையிலே தெரியும் செர்மனிக்காரர்களான ஆட்டோ (Otto), லீலீயந்த் தால் (Lilienthal) என்னும் உடன் பிறந்தார் இருவருங் கூட இந்த முயற்சியில் இறங்கி முனைப்புடன் செயல் பட்டனர். இவர்கள் மிகப் பெரிய காற்றாடி செய்து அதில் ஏறிப் பறக்கும் சறுக்கு விமானம் (Gider) செய்தனர். அதில் ஏறிப் பறக்கும் பயிற்சியை அடிக்கடி செய்து பார்த்தனர். ஒரு முறை ரைட் லீலீயந்த்தால் எப்படியோ தவறிக் கீழே விழுந்து இறந்தே போனார். லீலீயந்த்தால் இறந்த செய்தி எங்கும் பரவியது. இதை அறிந்த ரைட் பிறப்புகள் அதிர்ச்சியடைந்தனர் - மிகவும் வருந்தினர். ஆனால் லீலீயந்த்தாலின் தோல்வியை ஏணியாகக் கொண்டு, அவர்கள் செய்த முறைகளையும் இது தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் பின்பற்றி ஊர்தி செய்யும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டனர். இந்தக் கால கட்டத்தில், இங்கிலாந்தில் வாழ்ந்த '.கீரம் மாக்சில் என்னும் அறிஞர் பெட்ரோலால் இயங்கும் பொறி ஒன்றைக் கண்டுபிடித்தார். இதையும் ரைட் பிறப்புகள் வரவுக் கணக்கில் சேர்த்துக் கொண்டு மேலும் முயன்றனர். ஒரு நாள் வில்பர்ட் ஒரு மேசைமேல் இருந்த தூசுத் தொகுதியைத் தட்டினார். இரண்டு பக்கத்திலிருந்தும் - அதாவது - எதிர் எதிர் திசையிலிருந்து காற்று வந்ததால் தூசுத் தொகுதி அகலாமல் அப்படியே இருந்தது. இதைக் கண்ட வில்பர்ட், எதிர் எதிராக இயங்கும் இரண்டு