பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விளையும் பயிர் முளையிலே தெரியும் அளிக்கப்பட்டது. அதன் பின்னரே இவர்களின் முயற்சிக்கு அமெரிக்க அரசு வரவேற்பு அளித்தது. ஐந்து மணிநேரம் பறந்து காட்டியதும் உண்டு. மக்கள் திரளாகக் கூடி வேடிக்கை பார்த்து வியந்து பாராட்டினர். இவர்கள் இங்கிலாந்து முதலிய நாடுகளிலும் விண்ணில் பறந்து காட்டினர். இந்த வியத்தகு செயல்கட்கிடையே 1912ஆம் ஆண்டு வில்பர்ட் பிணியால் பீடிக்கப்பட்டு 45ஆம் அகவையில் உயிர் துறந்தார். இன்னும் நெடுநாள் இருந்திருப்பின் மேலும் எவ்வளவோ கண்டுபிடித்திருப்பார். வில்பர்ட் இறந்தபின் ஆர்வில் பல ஆண்டுகாலம் உயிரோடிருந்து பல அற்புதங்கள் செய்தார். ஒரு மணிக்கு 56 கி.மீ. பறக்கும் ஊர்தியை உருவாக்கின்ார். 1932ஆம் ஆண்டு இவர்களின் வெற்றியைப் பாராட்டி 18 மீட்டர் உயரம் கொண்ட நினைவுத்துண் நாட்டப்பட்டது. 1947 வரையும் ஆல்பர்ட் உயிருடன் இருந்தார். இந்த விழாவில் அவரும் கலந்து கொண்டு பாராட்டப் பெற்றார். நினைவுத் தூணின்மேல் ஒரு மாதிரி ஊர்தி காட்சிக்காக அமைக்கப்பட்டது. ஆராய்ச்சி நிலையம் 1909ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அமெரிக்கன் ரைட் கம்பெனி என்னும் பெயரில் ஒரு நிறுவனம் அமைத்தனர். வில்பர்ட் இருக்கும் வரையில் அதற்குத் தலைவராயிருந்தார்; பின் ஆல்வில் 1915 வரை