பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 83 தலைவராயிருந்தார். பின்னர் அந்த நிறுவனம் பிறருக்கு விற்கப்பட்டது. ஆர்விலின் சாதனையைப் பாராட்டி அவருக்கு 1913ஆம் ஆண்டு கால்யர் கோப்பை (collier Trophy) விருதாக வழங்கப்பெற்றது. அமெரிக்கன் ரைட் கம்பெனியை விற்றபின் ஆர்வில் மீண்டும் வான ஊர்தியின் வளர்ச்சி ஆராய்ச்சியில் ஈடு பட்டார். மேலும் குறைந்த நேரத்தில் நெடுந்தொலைவு பறக்கச் செய்ய என்னென்ன பண்ணலாம் என்ற எண்ணம் இவரை உந்தியது.அதனால் பணியைத் தொடர்ந்தார். டேட்டன் என்ற இடத்தில், ரைட் விமான ஊர்திக் asms) gyfrü## Éamouth (Wright Aero-nautical Laboratory) என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் இயக்குநராக ஆர்வில் பணியாற்றினார். விண்ணிலே பறக்கும் ஊர்தி கண்டுபிடித்த ஆர்வில் ரைட், 1948 சனவரி 30 ஆம் நாள் தம் உடலைக் கீழே கிடத்திவிட்டு விண்ணிலே பறந்து சென்றுவிட்டார். பறக்கும் ஊர்தியைத்தான் பறவை என்று கூறலாம். மனிதனை மனிதப்பறவை என்று கூறலாமா? பறவைகள் பறப்பதற்கு இறக்கை பயன்படுவது போல், மனிதன் பறப்பதற்கு இந்த ஊர்தி பயன்படுகிறது. அதனால், ஒரு வேடிக்கையாக, மனிதப் பறவை என மனிதன் உருவகம் செய்யப்பெற்றான். இந்தப் பெயர் நிலையானதன்று.