பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விளையும் பயிர் முனையிலே தெரியும் காதலில் விரிசல் இந்த ஏழமைக் காலத்தில் மேரி ஒர் இரஷ்யச் செல்வரின் குடும்பத்தில் தாதியாகப் பணிபுரிந்தார். அந்தச் செல்வரின் மகனுடன் காதல் ஏற்பட்டது. ஆனால், காதல் வெற்றி பெறாமல் விரிசல் கண்டது. அதனால், இனித் திருமணமே செய்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார் மேரி. பின்னர்க் கல்வி கற்கும் முயற்சியில் இறங்கி அரும்பாடு பட்டுக் கற்றுப் பெளதிகத்துறையில் எம்.ஏ. தேர்வில் முதலாவதாகவும், கணிதத்துறை எம்.ஏ. தேர்வில் இரண்டாவதாகவும் தேர்ச்சி பெற்றார். இறுதியாகப் போலந்து நாட்டில் வாழ முடியாமல் பாரிசுக்குப் போய்ச் சேர்ந்தார். பியெர் கியூரி பாரிசில் ஒர் அறிவியல் மேதை இருந்தார். அவர் பெயர் பியெர் élulf (Pierre curie) greffugl. இவர் 1859ஆம் ஆண்டு பாரிசில் பிறந்தார்; இளம் பருவத்திலேயே அறிவியல் ஆய்வில் தோய்ந்தார்; 23ஆம் அகவையில் இயற்பியலில் (Physics) உயர்பட்டம் பெற்றார்: அதற்குப் பின்னர்ப் பெளதிகப் பள்ளியின் தலைவரானார்; அங்கு தமது ஆய்வைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அப்போது மேரி o