பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விளையும் பயிர் முளையிலே தெரியும் நாடாகிய போலந்து நாட்டிற்குப் பெருமை சேரும் வகையில்தான் போலோனியம்’ என்னும் பெயர் வழங்கப்பெற்றது. துரத்தப் பட்டும் நாட்டுப் பற்று போகவில்லை. ரேடியம் இருவரும் மேலும் ஆய்ந்தனர்; ரேடியம் (Radium) என்னும் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. யுரேனியத்தின் கதிர் வீச்சைவிடப் பதின் மடங்கு மிகுதியான கதிர் வீச்சு ஆற்றல் ரேடியத்திற்கு உண்டு. நாம் கையில் கட்டிக் கொள்ளும் கடிகையாரத்தில் கூட ரேடியம் தொடர்புள்ள எண் இருப்பின், இருளிலும் மணி பார்க்க முடியும். இதை நேரிலும் பட்டறிந்து கண்டிருக்கலாம். ரேடியம் புற்று நோயையும் போக்க வல்லது. இதைக் கண்டு பிடித்த உரிமையைப் பணத்திற்கு விற்குமாறு தொழில் முதல்வர்கள் கேட்டனர். ஆனால் இவர்கள் விற்கவில்லை. நோபெல் பரிசு இந்தப் பெரிய கண்டுபிடிப்பைச் செய்ததற்காக, மேரிக்கும் கியூரிக்குமாக இணைந்து உயரிய நோபெல் பரிசு தேடி வந்தது. இருவரும் வான் புகழ் பெற்றனர். பின்னர், பியெர் கியூரிக்குச் சோர்பான் பல்கலைக் கழகப் பேராசிரியர் பணி கிடைத்தது. மேரிக்கும் இங்கு வேலை கிடைத்தது. எதுவும் உலகில் நிலைத்ததன்று என்று கூறுவார்களே - இன்பம் இன்பம் இன்பத்திற்குப் பின்