பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விளையும் பயிர் முளையிலே தெரியும் மேரிக்குக் கண்ணில் தொல்லை ஏற்பட்டதால் கண்ணில் அறுவை மருத்துவம் செய்து கொண்டு மொத்தமான கண்ணாடி அணிந்து கொண்டார். இத்தகைய மொத்த மான கண்ணாடியைத்தான் சிறார்கள் சோடா பாட்டல் என்று கிண்டல் செய்வது வழக்கம். பெண்ணாய்ப் பிறந்தும் அரும் பெருஞ் செயல்கள் புரிந்த மேரி, தொடர்ந்து ரேடியம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்ததால், அவருக்குச் சோகை நோய் ஏற்பட இறப்பு நேரலாயிற்று. தம் பணிகளைத் தொடருமாறு உலகுக்கு விட்டு 1934 ஆம் ஆண்டு புகழுடலுக்குள் புகுந்து பூத உடலை நீத்தார். எத்தனையோ கண்டுபிடிப்புகளைச் செய்த மேரி இரண்டு பெண் குழந்தைகளையும் கண்டு பிடித்து விட்டுச் சென்றார். தாயும் குட்டியும் தாய் பத்தடி தாண்டின் குட்டி பதினாறடி தாண்டும் என்னும் பழமொழிப்படி, மேரியின் மூத்த மகளான ஜூலியட் கியூரி என்பவர் தொடர்ந்து அறிவியல் ஆய்வு நிகழ்த்தி, தாய் மறைந்த பின் ஓராண்டிலேயே அதாவது 1935 ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றார். குட்டியின் கணவராகிய பிரதெரிக் ழொலியோ Ägf' (Frederic Jolio Curie) 6Tsörus (Gib Géissstoff sor ஆராய்ச்சி செய்து நோபெல் பரிசு பெற்றார்.