பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 91 எனவே, மேரி கியூரியின் குடும்பத்தை நோபெல் பரிசுக் குடும்பம் என்று கூறலாமன்றோ! குடும்பம் நான்கு நோபெல் பரிசு பெற்று உலகில் முன்னணியில் திகழ்வது ஒருபுறம் இருக்க, இது பெண்ணினத்துக்குப் புகழ் தேடித் தந்த ஒரு பெரும் பேறு அல்லவா? கியூரி குடும்பத்தின் பெரும் புகழ் வாழ்க! 14. கம்பி இல்லாத் தந்தி "காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கு ஒர் கருவி செய்வோம்” -பாரதியார் அறிமுகம் இன்றைக்கு ஐம்பது ஆண்டுகட்கு முன் ஊர்களில் எங்கெங்கோ சில வீடுகளில் வானொலிப் (Radio) பெட்டி இருக்கும். வானொலிப் பெட்டி உள்ள வீட்டிற்கு உறவினர்களோ நண்பர்களோ சென்று பாடல்களையும் செய்திகளையும் கேட்பதுண்டு. நம் வீட்டில் வானொலி இல்லையே என்று ஏங்கிய சிறார்கள் பலர். ஆனால், இப்போதோ (பத்தோன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்) பட்டி தொட்டிகளில் எல்லாம் - கூரை - குடிசை வீடுகளில் எல்லாம் வானொலி திருவிளையாடல் புரிந்து ஒலிப்பதைக் கேட்கலாம். செல்லும் இடங்களில் எல்லாம் கைப்பெட்டியாக (டிரான்சிஸ்டர்) எடுத்துச் சென்று கேட்கலாம். உள்ளங்கையிலேயே அடக்கமாகக்