பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் - - 95 தமது கம்பியில்லாத் தந்தி முறைக்குத் தாமே உரியர் என்னும் காப்புரிமை (Patent) பெற்றார். - இவர் தமது ஆய்வில் ஐயம் கொண்டவர்களுக்கு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓரிடத்திற்குக் கம்பி யின்றிச் செய்தி அனுப்பித் தமது ஆய்வுக்கு உண்மை முத்திரை தந்தார். 1897ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கம்பியில்லாத் தந்தி நிறுவனம் (wireless Telegraph and Signal company) goldăşti. Glogy|b ஆய்வு செய்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஓரிடத்திற்குக் கம்பியில்லாத் தந்தி மூலம் செய்தி அனுப்பிக் காட்டினார். மற்றும், ஒரு படகிலே கருவிகளை வைத்துக் கொண்டு, ஒரு தீவிலே இருந்த விக்டோரியா பேரரசிக்குக் கடல் வழியாகவே செய்தி அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மார்க்கோனி மேலும் ஆய்ந்து கம்பியில்லாத் தந்தியை அடிப்படையாகக் கொண்டு வானொலி (Radio) கண்டு பிடித்து உலகத்தை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தார். இதனால் ஏற்பட்ட நன்மைகள் பல. பரிசு 1909 ஆம் ஆண்டு உலகின் சிறந்த பரிசான நோபெல் பரிசு மார்க்கோனியை வந்தடைந்தது. 1912 ஆம் ஆண்டு மிகப் பெரிய கப்பல் கடலில் மூழ்கிப் பல உயிர்களைப் பலிகொடுத்தது. அப்போது, கம்பில்லாத் தந்தி மூலம் சில கப்பல்கட்குச் செய்தியனுப்பி வரவழைத்து, மாண்டவர் போக எஞ்சிய சிலரின் உயிர்கள்