பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விளையும் பயிர் முளையிலே தெரியும் காப்பாற்றப்பட்டன. இதன் பிறகு இவரது கண்டு பிடிப்பின் பெருமை உலகளாவியது. மேலும் ஆய்ந்து ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவுக்கும் வானோலி (ரேடியோ) அலைகள் போய்ச்சேர முடியும் எனக் கண்டறிந்து ஆவன செய்தார். இடையில், மோட்டார் மோதிய இடையூற்றினால் 1912-இல் வலக்கண் செயலிழந்தது. அதன் பிறகும் ஆய்வை நிறுத்தவில்லை. சுவை கண்ட பூனை சும்மா இருக்குமா ? கொண்டு வந்தால் தாய் துக்குத் துக்கி என்னும் ஒரு நாடகத்தில் கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் என ஒரு கருத்து சொல்லப்படும். ஆனால் மார்க்கோனியைப் பொறுத்த மட்டில் கொண்டு வந்த பிறகே தாய்ப் பற்று - தாய்ப்பாசம் கிடைத்தது. அதாவது, அவர் இங்கிலாந்தில் தங்கிப் பல ஆய்வுகள் செய்து பேரும் புகழும் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற பின்பே அவருடைய அருமை பெருமையைத் தாய் நாட்டு இத்தாலிய அரசு அறிந்து அவரை இத்தாலிக்கே வந்து விடுமாறு அழைத்தது. அவரும் பிகுவு காட்டாமல் தாயின் மடியை நோக்கி ஓடும் கன்று போல் இத்தாலி சென்றடைந்தார். இத்தாலி அரசு, அவருக்கு, இத்தாலி அரசின் வாழ்நாள் செனட்டர் பதவி அளித்தது. இது நடந்தது 1914ஆம் ஆண்டில்.