பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விளையும் பயிர் முளையிலே தெரியும் அலெக் அலெக்சாந்தரை நண்பர்கள் அலெக் எனச் சுருக்கமாகப் பெயரிட்டு அழைத்தனர். இவரது தமையன் இவரை மருத்துவப் படிப்பு படிக்கச் செய்ய வேண்டுமென விரும்பினார். மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதிய அலெக் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1901 ஆம் ஆண்டு பாட்டிங்டன் (Paddington) என்ற ஊரில் உள்ள செயின்ட்மேரீஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ‘ஆல்ம்ராத்ரைட் (Almroth Wright) என்பவர்கிருமிகள் பற்றிய ஆய்வு நிறுவனம் அமைத்து அதில் கிருமிகள் பற்றி ஆய்வு செய்து வந்தார். அந்த ஆய்வுக் கூடத்தில் வந்து ஆய்வு செய்யுமாறு ஃபிளெமிங் அழைக்கப் பெற்றார். லைசோசைம் இவர் 1921 ஆம் ஆண்டு தம் முக்கிலிருந்து வந்த சளியை ஆராய்ந்தார். நல்ல கிருமிகள் கெட்ட கிருமிகளைக் கொன்றதை அறிந்தார். நல்ல நுண்ணுயிர் குருதியிலுள்ள வெள்ளை அணுக்களைக் கொல்லாது கெட்ட நுண்ணுயிர்களை மட்டுமே கொல்லும். இந்த நுண்ணுயிருக்கு ‘லைசோசைம் (Lysozyme) என்ற பெயரை வழங்கினார். பெனிசிலின் இந்த ஆய்வு படிப்படியாகத் தொடர்ந்தது ஃபிளெமிங் மேசைமேல் பல தட்டுகளில் நுண்ணுயிர்களை வைத்து