பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 99

னந்தம் என்ற அந்த மாணவருக்கு என் பாராட்டு தல்கள். அதோடு, உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் அந்த மாணவருக்குத் தெரி வித்துக் கொள்கிறேன்.'

தலைவர் தன் பேச்சை முடித்தபோது அரங் கமே அதிரும் வகையில் கையொலி எழுந்தது. அறிவானந்தத்தின் பெருமை மாணவர்களிடை யே வானளாவ உயர்ந்தது. அவன் நெருங்கிய நண்பன் முருகு, தன் நண்பனின் பெருமையை யும் சிறப்பையும் எண்ணிப் பெருமிதமடைந் தான். இந்தப் பாராட்டும் பரிசும் தனக்கே கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான். இந்தச் சந்தோஷச் செய்தியை உடனடியாக அறிவானந் தத்துக்குத் தெரிவிக்க விரும்பினான். மருத்துவ மனை நோக்கி ஓடினான்.

அதே சமயத்தில், தான் செய்த தவறுகளுக் கெல்லாம் சரியான தண்டனை கிடைத்துவிட்ட தாகச் சிங்காரம் கருதினான். தன் மாணவ நண்பர் களின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே கூசினான். தலைவர் தன்னை நேரடியாக மாணவர்கள் மத்தியில் காட்டிக் கொடுக்க வில்லைதான். ஆனால் தான் தவறு செய்தவன் என்பதை அவன் மனச்சாட்சி காட்டிக் கொடுக்கவே செய்தது. அறி வானந்தம் எழுதிய பேச்சுக்காகத் தனக்குப் பரிசு