பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விழா தந்த விழிப்பு

கிடைத்தது என்னவோ உண்மை! ஆனால், அதைத் தொட தனக்கு உரிமையும் தகுதியும் இல்லை என்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் ஒரே பரிகாரம்தான் உண்டு. அறிவானந்தத்தை நேரில் கண்டு இப்பரிசை அவனிடம் தந்து மன்னிப்புக் கேட்பதுதான் அது.

இப்படி ஒரு முடிவுக்கு வந்த சிங்காரம் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

மருத்துவமனை வராந்தாவில் அறிவானந் தமும் முருகும் பேசிக் கொண்டிருந்தார்கள். இரு வர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. முருகு சொன்ன சில செய்திகளைக் கேட்டபோது அறி வானந்தத்தின் முகத்தில் மகிழ்ச்சியும் வருத் தமும் மாறி மாறி தோன்றியது.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் சிங் காரம். அவன் கைகளில் பேச்சுப் போட்டியில் கிடைத்தப் பரிசுப் புத்தகங்கள் இருந்தன. கண்களில் நீர் நிறைந்திருந்தது. தயங்கித் தயங்கி அறிவானந்தத்தை அணுகினான். சிங்காரத்தைக் கண்ட அறிவானந்தம் ஓடிவந்து அவன் கை களைப் பற்றிக் கொண்டான். பரிசு பெற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்தான். சற்றும் எதிர்பாராத இந்நிகழ்ச்சியால் சிங்காரம் நெகிழ்ந்து போ னான். அவன் கண்கள் நீரைச் சொறிந்தன. எதிரி