பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விழா தந்த விழிப்பு

“என்ன, சிங்காரம் ஏன் வீணா அழறே? தவறை உணர்றவங்களை இறைவன் உடனே மன்னிச்சுடறான்னு நம்ம ஆசிரியர் அடிக்கடி சொல்வார், இல்லையா?"

சிங்காரத்தை தேற்ற முயன்றான் அறிவா னந்தம்.

'அறிவானந்தம் கடவுள் மன்னிப்போட உன் மன்னிப்பும் வேண்டும் அதை வேண்டித் தான் வந்திருக்கேன்!'

மனம் திறந்து உருக்கமுடன் கூறினான் சிங் காரம். அவனிடம் ஏற்பட்டுள்ள பெரும் மாற்ற மும் பேச்சும் அறிவானந்தத்தையும் முருகுவை யும் கண்கலங்க வைத்துவிட்டன. அறிவானந்தம் நெகிழ்ந்த மனதுடன் பேசினான்.

“என்னைப் பொருத்தவரை நீ ஒண்ணும் அப்படி பெரிய தவறு பண்ணிடலே, எப்படியா வது, எதிலாவது பரிசும் பாராட்டும் வாங் கணும்னு நீ ஆசைப்பட்டது ரொம்பவும் நியாய மானதுதான். ஆனால், அதிலே வெற்றி பெற நீ கடைப்பிடிச்ச குறுக்கு வழிதான் எனக்கு வேத னையை உண்டாக்கிடுச்சு. நேரான வழியிலே தகுதியும் திறமையும் வளர்த்துக் கொள்ளணும்.