பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 103

அப்போ, எல்லாப் பரிசுகளும் பாராட்டுகளும் நம்மைத்தேடி தானாகவே வரும். எருப் போட்ட நிலம்தானே நன்றாக விளைய முடியும்?"

அறிவானந்தத்தின் பேச்சும் செயலும் தனது தவறுகளைக் காரண காரியத்தோடு உணரச் செய்வதாகச் சிங்காரம் உணர்ந்தான். இவ்வளவு நற்குணமுள்ள திறமைசாலியை இது நாள் வரை வெறுப்போடு பார்த்தது எவ்வளவு பெரிய நட் டம் என்று உணர்ந்தான். இதற்காக வருந்தினான். அவனுக்கு நேராகப் பரிசுப் புத்தகங்களை எடுத்து நீட்டினான்.

'இந்தா அறிவானந்தம் உன் பேச்சுக் கட்டு ரையை மனப்பாடம் செய்து பேசிய பேச்சுக்குக் கிடைத்த பரிசுப் புத்தகங்கள். இதைத் தொடக் கூட எனக்குத் தகுதி இல்லை. இவைகள் உனக் குத்தான் சொந்தம்' என்று சொல்லியவாறே பரிசு நூல்களை அறிவானந்தத்திடம் கொடுக்க முயன்றான். ஆயினும், அவற்றைப் பெற்றுக் கொள்ள அறிவானந்தம் விரும்பவில்லை.

'பேச்சை எழுதினது நானாக இருந்தாலும் அதை அழகாகப் பேசியது நீதானே. ஆகவே,