பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் வளர்தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபா

சென்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகங் களில் பட்டம் பெற்ற வளர்தமிழ்ச் செல்வர், கலைமாமணி மணவை முஸ்தபா,சர்வதேசத் தமிழ்த் திங்களிதழான 'யுனெஸ்கோ கூரியர் ஆசிரியராவார்.

காலம் தேடும், தமிழ், மருத்துவக் கலைச் சொல் களைஞ்சியம், 'இளைஞர் இஸ்லாமியக்கலைக்களஞ்சியம்' உட்பட நாற்பது தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத் திலிருந்து எட்டுநூல்களையும், மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் மொழி பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளி வந்துள்ளன. ஐந்து சிறுவர் இலக்கியங் களையும் படைத்துள்ளார்.

தென் மொழிகள் புத்தக நிறுவ்னத்துக்காக நாற் பத்தி மூன்று சிறுவர் நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவை புதினம், சிறுகதை, நாடகம், அறிவியல், சுற்றுலா பற்றிய பல்துறைப் படைப்புகளாகும். கடந்த இருபது ஆண்டு களாக வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னை வானொலி நிலைய சிறுவர் நாடக விழாக்களில் இவரது நாடகங்கள் பல ஒலிபரப்பாகி, பாராட்டப்பட்டுள்ளன. இவரது கலை, இலக்கியப் பணி யைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் 1986இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டி யது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு திரு.வி.க. விருதை 1989இல் வழங்கியது. இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் எம்.ஜி.ஆர். விருது வழங்கியது.